Asianet News TamilAsianet News Tamil

தென்மாவட்டங்களையும் கொஞ்சம் கவனியுங்க..!! ரெம்டிசிவர் மற்றும் டாசிலிசிமாப் மருந்துகளை வழங்க கோரும் பாமக..!!

நடுத்தர மற்றும் சிறு மருத்துவமனைகளின் கையில் வரும்போது ரூ.5,000க்கும் குறைவான இந்த மருந்துகளின் விலை ரூ.25,000க்கும் மேல் விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது.

Take a look at the  southern districts, Pmk seeking to provide Remediesiver and Dacilisimab drugs
Author
Virudhunagar, First Published Jul 29, 2020, 10:32 AM IST

கொரோனா வைரஸ் தொற்று தென் மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரெம்டிசிவர் மற்றும் டாசிலிசிமாப் மருந்துகளை தென்மாவட்டங்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளரான திலகபாமா கோரிக்கை விடுத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- உலகம் முழுவதிலும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு லட்சம் பேர் இதற்கு பலியாகி உள்ளனர்.இந்தியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Take a look at the  southern districts, Pmk seeking to provide Remediesiver and Dacilisimab drugs

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் திவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அனைவரின் எதிர்பார்ப்பும் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது தான். தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக ரெம்டிசிவர் (remdesivir) மற்றும் டாசிலிசிமாப்(tocilizumab) ஆகிய மருந்துகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு மருந்துகளும் சிறந்த வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. இந்த வகை மருந்துகள் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மட்டுமே எளிதில் கிடைக்கும் வகையில் பயன்பாட்டில் உள்ளது. தென்மாவட்டங்களில் இந்த மருந்துகளை அணுக மிகவும் கடினமாக உள்ளது. 

Take a look at the  southern districts, Pmk seeking to provide Remediesiver and Dacilisimab drugs 

மருந்துகளின் பற்றாக்குறையினால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மருந்துகள் எளிதில் கிடைத்தால் நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். மேலும் மருந்துகள் ஒரு சில பெரு நிறுவனங்களின் கைவசம் உள்ளது. நடுத்தர மற்றும் சிறு மருத்துவமனைகளின் கையில் வரும்போது ரூ.5,000க்கும் குறைவான இந்த மருந்துகளின் விலை ரூ.25,000க்கும் மேல் விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது.எனவே மருந்துகளை எளிதில் அணுகவும் குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு மருந்துகளை சரியான முறையில் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.  என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios