தப்லிகி ஜமாஅத் எந்த சட்டத்தையும் மீறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், ‘’தப்லீஹி ஜமாத்தை சேர்ந்தவர்கள் எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை. மும்பையில் உள்ள தாராவி சேரியிலும் படுபயங்கரமாக கோவிட் -19 தொற்று அதிகமாக இருக்கிறது. அத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் ஜமாத்தில் இருந்தவர்களுக்கு பாதிப்புகள் குறைவுதான். தப்லிகி ஜமாஅத் பிரச்சினையில் நிறைய அரசியல் கட்சிகள் வகுப்புவாத பிரிவினையை பயன்படுத்தி விட்டன. அவற்றை புறக்கணிக்க வேண்டும். ஆனலும் ஜமாத்தில் சிறு தவறு நடந்துள்ளது. 

ஜமாத்தில் எந்தவொரு சட்ட மீறலும் நடந்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் அங்கு சென்றவர்கள் வன்முறையை தூண்டும் விதமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆகையால் அதிக சோதனை காரணமாக எண்ணிக்கையும் அதிகமாக காட்டப்பட்டது. குட்டையை கலங்கிய நீரில் மீன் பிடிக்க நினைத்தார்கள். நாம் அவற்றை பெரிது படுத்தக்கூடாது.  நாம் அவற்றைப் புறக்கணித்து, கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கியமான பிரச்சினையைப் பார்க்க வேண்டும்’’எனத் தெரிவித்து இருந்தார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் சுரேஷ், ‘’உண்மையாகவா..? நாம் அனைவரும் முட்டாள்கள்! சரியா ??’’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.