t rajendar challenging edappadi
GST வரி கேளிக்கை வரி சேர்த்து இரட்டை வரி விதிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டி ராஜேந்தர் இன்று பேட்டியளித்தார் அப்போது ஜெயலலிதாவை வைத்து ஆட்சிக்கு வந்த நீங்கள் சும்மா.. அம்மாதான் எல்லாம். இந்த நாட்டுக்கு தேவை அம்மாதான் என்று கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேட்டி :
திரையுலகம் கிடக்குது மூடி... தமிழக அரசு நீயிருக்குற வாய் மூடி... அம்மாவ வச்சுதான் ஓட்டு வாங்கினே... அம்மாவைவிட நீயென்ன கொம்பா...? அம்மாவ வச்சுதான் இந்த நிலையில இருக்கீங்க... நீயெல்லாம் தனியா நின்னு ஒரு ஓட்டு வாங்கிடுவீங்களா...? இது அம்மா போட்ட பிச்ச... இந்த ஆட்சி!
30 சதவீதம் கேளிக்கை வரிய நீக்கணும்... கேரளாவுல போட்டிருக்கான் 30%, 28%, ஜி.எஸ்.டி.வரி 2% கேளிக்கை வரி... மொத்தம் 30% தான் வரி... ஆந்திராவுலேயும் அப்படித்தான்.
மேற்கு வங்கத்துலேயும் 100 ரூபாய்க்கு கீழ டிக்கெட் விலை இருந்தா 18 சதவீதம்தான் வரி. 50 சதவீதத்த விட்டுக்கொடுத்துட்டாங்க. அந்த அம்மாவ கைக்கூப்பி வணங்குறேன். அங்க இருப்பது ஒரு அம்மாதான் (மம்தா பானர்ஜி). ஆக இந்த நாட்டுக்குதேவை அம்மா. நீயெல்லாம் சும்மா... என எடப்பாடியை டி.ராஜேந்தர் கடுமையாக தாக்கிப் பேசினார்.
