Asianet News TamilAsianet News Tamil

சின்னம் விவகாரம் எங்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் உள்ள பிரச்சனை... கே.என்.நேரு அதிரடி சரவெடி..!

இன்னும் 2 அல்லது 3 கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார். 

symbol issue is a problem for us and the coalition parties... kn nehru
Author
Chennai, First Published Mar 2, 2021, 6:44 PM IST

இன்னும் 2 அல்லது 3 கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பெருபான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்பது பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். தனிச் சின்னம் தொடர்பான விவகாரம் எங்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் உள்ள பிரச்சனை. 

symbol issue is a problem for us and the coalition parties... kn nehru

கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் எந்த அதிருப்தியும் இல்லை. புது சின்னத்தில் ஓட்டு வாங்குவது சிரமம், அதனால் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்கிறோம். இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது. உதயநிதி போட்டியிடுவது பற்றி மு.க.ஸ்டாலின் முடிவு  எடுப்பார். பிக் பிரதர் என்ற மனப்பான்மையுடன் கூட்டணி கட்சிகளுடன் திமுக செயல்படவில்லை.

symbol issue is a problem for us and the coalition parties... kn nehru

தேர்தலுக்காகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்ததாக கே.என்.நேரு விமர்சனம் செய்துள்ளார். நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை. கட்சியில் பலரின் பெயர் ராமர் என்று உள்ளது. ராமர் கோயில் கட்ட மஸ்தான் நிதி அளித்தது மத நல்லிணக்க அடிப்படையில்தான். அறுபடை விடுகளிலும் திமுகதான் வெற்றி பெற்றுள்ளது என வேல் குறித்த கேள்விக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்துள்ளார். வேல் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் முருகக்  கடவுளை வணங்குபவர்கள் என்று அர்த்தமா? என கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios