பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதிய அடைய வேண்டாம். சேலம் வேலூர் திருவள்ளூர் டாமிப்ளூ மாத்திரைகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. குணப்படுத்த கூடிய நோய்தான். யாரும் பீதியடையத்தேவை இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


நான்கு மாவட்டங்களிலும் ஆய்வு நடத்திய பின்னர் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.


தமிழகத்தில் குளிர்காலத்தில் வைரஸ் பாதிப்புகளால் ஏற்படும் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம். பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.


இதில் அவர்கள் குடும்பத்தில் இரண்டு பேருக்கு பன்றிகாய்ச்சல் ஏற்பாட்டது. அதில் அவர் உயிரிழந்தார். ஆனால் தமிழக அரசு அதன் பின்னர் எந்த உயிரிழப்பும் ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 


ஒருவரிடம் இருந்து எச்1என்1 வைரஸ் கிருமி மற்றவருக்கு பரவுகிறது. எனவே, தனி நபர் சுகாதாரம் முக்கியமாகப் பேண வேண்டியது அவசியம்.


பன்றிக் காய்ச்சல் நோயை பருவ காலங்களில் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, யாரும் பீதியடைய வேண்டாம். 


எனவே, 4 மாவட்டங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிற மாவட்டங்களில் ஓரிருவருக்கு பாதிப்பு உள்ளது. அங்கும் கண்காணிப்பு உள்ளது.


இந்த ஆண்டு காலநிலையில் சற்று மாறுபட்டுக் காணப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பனி குறைந்து, கோடைக்காலம் தொடங்கி, வெயில் அதிகரிக்கத் தொடங்கினால் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது குறையும் .


10 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 லட்சம் மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாமிஃப்ளூ மாத்திரைகள் இருப்பில் உள்ளன.

சில தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் இருப்பில் வைத்துள்ளன. இது தவிர, அரசிடம் டாமிஃப்ளூ மாத்திரைகளை கேட்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது . 


பன்றிக்காய்ச்சல் குணப்படுத்த கூடிய நோய் தான் , உலக சுகாதார நிறுவனம் இதை சாதாரண காய்ச்சலாக கருதினாலும் நாங்கள் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். யாரும் பீதியடைய வேண்டாம் . இவ்வாறு விஜய்பாஸ்கர் தெரிவித்தார்.