இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் சாமியை வழிபட பூசாரியிடம் அமைச்சர் சேகர்பாபு அனுமதி கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் சாமியை வழிபட பூசாரியிடம் அமைச்சர் சேகர்பாபு அனுமதி கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அனுமதி கிடைத்த பிறகே பிரகாரத்தில் நின்றி அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.
மூடநம்பிக்கை கடவுள் மறுப்பு போன்ற சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தின் நீட்சியாக களத்தில் நிற்கிறது திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் அனைத்து தரப்பு மக்களுக்கான அரசியல் கட்சியாகவே தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. அதிலுள்ள பெரும்பாலானோர் திராவிட இயக்கம், பெரியாரிய கொள்கைகள் ஊறிப் போனவர்கள் ஆகவே இருப்பார், அதேநேரத்தில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களும் அமைச்சர் பொறுப்பில் இருந்து பணியாற்றி வருகின்றனர். அதில் மிக முக்கியமானவர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆவார். கோவில், குளம், வழிபாடு, பூஜை புணஸ்காரண் என சதா வட்டமடித்துக் கொண்டிருப்பவர் என்பதால் அவருக்கு ஏற்ற துறையான இந்து சமய அறநிலைத்துறையை முதல்வர் அவருக்கு வழங்கியுள்ளார். அவரும் அத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றது முதல் சுற்றி சுழன்று வருகிறார்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொரட்டூர் ஏரிக்கரை அருள்மிகு ஸ்ரீ பாடலாத்ரி சோயாத்தம்மன் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆலயத்திற்கு குடமுழுக்கு நீராட்டு விழா கடந்த 13ம் தேதி முடிவுற்ற நிலையில் அமைச்சர் என்று அங்கு ஆய்வு நடத்தினார். கோவிலுக்குள் சென்ற அவர் கருவறைக்கு முன் பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளே வந்தபோது, அங்கிருந்த கோவில் பூசாரியிடம் மிகவும் பவ்யமாக சாமி.. சாமியை வழிபடலாமா என அனுமதி கேட்டார்.

அவரது பவ்யம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது . பின்னர் அமைச்சருக்கு கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆலயத்திற்கு சொந்தமான சமுதாயக்கூடம் மற்றும் கடைகள் பொதுமக்களுக்கு குறைந்த வாடகைக்கே வழங்க வேண்டும் எனவும், ஆலயத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரியும் மூன்று ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார். கொரட்டூர் ஏரியில் ஆய்வு செய்த அவர், ஏரியில் தண்ணீர் வடிந்ததும் முறையாக தூர்வார முதலமைச்சரிடம் எடுத்துக் கூறப்படும் என்றார்.
