சென்னை விமான நிலையத்தில் டீ-யின் விலை அதிகம் இருந்ததால் அதை வேண்டாம் என்று கூறியதாக ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதற்கு பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், எப்போதாவது காசு கொடுத்த சாப்பிட்டா அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை விமான நிலையத்தில் தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு காபி கடையில்,  டீ கேட்டேன். சுடு தண்ணீரும், ஒரு டீயும் கொடுத்தனர்.

டீ-யின் விலை ரூ.135. விலையைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த நான் டீ வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதேபோல் மற்றொரு பதிவில், காபியின் விலை ரூ.180. இதை யார் வாங்குகிறார்கள் என்று கடைக்காரரிடம் கேட்டேன் நிறைய வேர் வாங்குகிறார்கள் என அவர் சொன்னார். அப்படி என்றால் நான்தான் நிதர்சனம் புரியாமல் இருக்கிறேனா? என பதிவிட்டிருந்தார்.

ப.சிதம்பரத்தின் இந்த பதிவு குறித்து, நெட்டிசன்கள் பலவாறு கருத்துக்கள் கூறி வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், எப்போதாவது திடீர்னு காசு கொடுத்த சாப்பிட்டா அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.