S.Ve.Shekar appeared before the court
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பாஜகவின் எஸ்.வி.சேகர் இன்று ஆஜரானார்.
பெண் பத்திரிகையாளர் குறித்த இழிவான கருத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட எஸ்.வி.சேகர்ருககு பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த பதிவை எஸ்.வி.சேகர் நீக்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் எந்த நேரத்திலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய அவர், தலைமறைவாக இருந்தார். முன்ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றமும், எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் இன்று காலை 10 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். எஸ்.வி.சேகர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
