முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி சேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர் மீது ஆவேசம் காட்டுகாட்டிருக்கிறார்.

 அதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தை வையுங்கள் என எஸ்.வி.சேகர் கூறியது பற்றி நேற்றைய தினம் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், அதிமுக கொடிய காட்டி ஓட்டு வாங்கி அதிமுக எம்எல்ஏ ஆனவர் எஸ்.வி.சேகர். அவர் மான ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்எல்ஏவாக ஐந்து ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் தற்போது பெறும் பென்சனை திருப்பித்தர வேண்டும். அதனை அவர் செய்வாரா என்று கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமாரின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், என் எம்எல்ஏ சம்பளம், என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் உழைப்புக்கு அரசு கொடுத்த கௌரவம். நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா? ஜெயலலிதாவின் கால்களை தவிர நிர்மிர்ந்து பார்க்க கூட முடியாதவர்கள் நீங்கள் என்று கேலி செய்திருந்தார் அவர்.


இதனிடையே, இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இ-பாஸ் வழங்குவதில் எந்த தடையும் இல்லை. முறையான ஆவணங்கள் தாக்கல் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நயினார் நாகேரந்திரன் பாஜகவை விட்டு அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்.தொடர்ந்து, அவரிடம் எஸ்.வி.சேகர் குறித்து கேள்வி எழுப்பிய போது, எஸ்.வி.சேகர் முதலில் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவர் வந்ததே இல்லை. எதாவது கருத்து சொல்லிவிட்டு வழக்கு வரும்போது, ஓடி ஒளிந்து கொள்வார்.