விரைந்து வந்து சரணடைந்தார் சுதாகரன் ....” கைதி எண் ” சில நொடியில் அறிவிப்பு ...

சசிகலா இளவரசி சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பிறப்பித்தது உச்சநீதிமன்றம் . இந்நிலையில் இன்று காலை சுமார் 1௦.3௦ மணிக்கு, போயஸ் கார்டனிலிருந்து, புறப்பட்டார். உடன் சசிகலாவின் அண்ணி இளவரசியும் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூன்றாவது நபரான சுதாகரன் சரணடைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

சுதாகரன் மனு தாக்கல் :

இந்நிலையில், சுதாகரன் சரணடைய கால அவகாசம் கோரி, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லை என காரணம் காட்டி ,மனு தாக்கல் செய்துள்ளார் சுதாகரன் .

நீதிபதி ஏற்கவில்லை :

நாளை சரணடைய நீதிபதி நிராகரித்ததால், இன்னும் அரை மணி நேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சுதாகரன் சரணடைய வேண்டுமென நீதிபதி தெரிவித்ததை அடுத்து , தற்போது சுதாகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் சில நிமிடத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.