பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். 

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர்.

சமூக வலைதளத்தை பயன்படுத்தி, பல்வேறு பணிகளை திறம்பட செய்து வந்தார்.இதன் காரணமாக டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அதிக எண்ணிக்கையில்  பின் தொடர்பவர்களை உடைய பெண் தலைவர் என்ற பெருமையை, சுஷ்மா சுவராஜ் பெற்றுள்ளார். 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, அளிக்கப்பட்டிருந்த , சிறப்பு அந்தஸ்துகளுக்கான, அரசியல் அமைப்புச் சட்டத்தின், 370 மற்றும் 35 - ஏ பிரிவுகள் நீக்கப்பட்டது குறித்து சுஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் 'என் வாழ்நாளில் இந்த நாளை தான் காண காத்திருந்தேன். பிரதமர் மோடிக்கு எனது நன்றி என தனது கடைசி கருத்தினை பதிவேற்றினார்.

இதே போல் காஷ்மீர் பிரச்சனையை மிகச் சிறப்பாக கையாண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் சுஷ்மா நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு பதிவுகளைத் தான் சுஷ்மா ஸ்வராஜ் தனது கடைசி கருத்தாக பதிவிட்டிருந்தார்.