ஹரியானா மாநிலம் அம்பாலாவின் பிறந்த சுஷ்மா ஸ்வராஜின் குடும்பம் பாகிஸ்தான் லாகூரில் இருந்து பிரிவினையின் போது இந்தியாவில் குடிபெயர்ந்தனர். ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தை பின்பற்றி வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை தனது சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். 

சமஸ்டிகருத மொழி மீது இருந்த அளவற்ற பற்றால் அதில் பட்டம் பெற்ற அவர், அரசியல் மீதான ஆர்வத்தின் காரணமாக பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவிலும் பட்டம் பெற்றார். மேலும் சட்டமும் அவர் பயின்றார்.  பின்னர் சுஷமா. உச்சநீதிமன்றத்தில் 1973ம் ஆண்டில் வழக்கறிஞராக பணியாற்றினார். 

அவருடைய கணவர் ஸ்வராஜ் கவுஷலும் சட்டத்துறையினர் நிபுணத்துவம் பெற்றவர். அதனால் அரசியல் களத்திலும், சட்டத்துறையிலும் அவரால் ஒருசேர பயணிக்க முடிந்தது. இந்நிலையில் தான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் அவசரநிலையை பிரகடணம் செய்தார்.
 
அப்போது நடந்த பல்வேறு அத்துமீறல்களை பார்த்து கொதித்தெழுந்த சுஷ்மா பாஜக-வில் இணைத்து கொண்டார். சிறந்த பேச்சாற்றலும், தீவிரமாக அரசியல் சிந்தனையும் கொண்டதால் மக்களோடு மக்களாக இணைந்து பழகினார். 

1977ம் ஆண்டு நடந்த ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற சுஷ்மா, 1982 வரை அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். அப்போது அமைச்சர் பதவி அவரை தேடி வந்தது. அப்போது அவருக்கு வயது 25 தான்.

தனது கடின உழைப்பால் தொடர்ந்து அரசியலில் கிடுகிடுவென உயர்ந்தார். 27வது வயதில் ஹரியானா பாஜக-வின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சுஷ்மா. அக்டோபர் 1998ம் ஆண்டில் டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் மத்திய அமைச்சர் பதவிக்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பல்வேறு அமைச்சக பொறுப்புகளை வகித்து வந்த சுஷ்மா சுவராஜ், ஹரியானவை சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியிலும் நின்று மக்களவை தேர்தலை எதிர்கொண்டார். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை, குடும்ப நலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றுக்கு அமைச்சராக பதவி வகித்துள்ளார். 

2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தபோது பாஜக மக்களவைக்கான எதிர்க்கட்சி தலைவராக பொறுப்போற்றுக் கொண்டார். 

உள்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் இருந்த போது அவரது பணிகள் அனைவரது பாராட்டையும் பெற்றது. அதே போல் . வெளியுறவுத்துறையில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய சுஷ்மா, உடல்நிலையை காரணம் காட்டி இந்த முறை அமைச்சரவை பதவியை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இந்நிலையில் தான் நேற்று அவர் திடீரென மாரடைப்பால் காலமானார்.