மின்னல் வேக மனிதர் என்ற பட்டத்தை பெற்றவர் உசேன் போல்ட். இவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 100 மீ போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்தார். அதேபோல் 200மீ ஓட்டப் போட்டியில் 19.19 செகண்டில் ஓடி புது சரித்திரம் படைத்தவர். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவரது புகழ் ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஒயவில்லை. சாதனையும் முறியடிக்கப்படவில்லை.அதே போல் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில், இன்று உசேன் போல்ட், காசினி பென்னட் தம்பதியருக்கு புது வரவாக கடந்த மாதம் ஜூன் 14 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது..உசேன் போல்ட்... இந்த மண்ணில் புதிய வரவாக பிறந்துள்ள தனது அன்பு மகளுக்கு பெயர் சூட்டுவதற்காக "ஒலிம்பியா லைட்டிங்" என பெயர் சூட்டியுள்ளார்..இன்று அவரது காதலியான காசினி பென்னட்க்கு பிறந்த நாள்.அவருக்கும் தனது ரசிகர்களுக்கும்  இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக எங்கள் வீட்டு தேவதை என தன் அன்பு மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக ஆகி இணையத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது.