ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை போட்டு கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நாளை திறக்கப்பட உள்ளன.

 

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு விசாரித்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வர் ராவ், சஞ்சய் கிஷான் கௌல், பூஷண் ராமகிருஷ்ண கவாய் ஆகியே மூன்று பேர் அமர்வு விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசின் சார்பில், வைக்கப்பட்ட வாதத்தில்,  மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் வருவாய்க்கு டாஸ்மாக் முக்கியம். டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக வேறு துறைகள் மூலம், இந்த வருவாயை ஏற்படுத்த 4 முதல் ஐந்தாண்டு காலம் ஆகலாம். ஆன்லைனில் மது விற்க முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஆன்லைன் சாத்தியம் கிடையாது என தமிழக அரசு வாதிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட முடியாது நிலையில் அரசு எல்லை பாதுகாப்பு மிக அவசியமாக கருதப்படுகிறது’’என வாதிடப்பட்டது.

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை கடைகள் திறக்கபட உள்ளது. இந்நிலையில்,  ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. விளம்பர நோக்கில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி அபராதம் விதித்துள்ளது.