ஜெயலலிதா சமாதியில் 40 நிமிட மவுன சாமியாராக அமர்ந்த பிறகு அதிரடி ஆட்டத்தை தொடங்கி விட்டார் ஓ.பி.எஸ்.

அடுத்தடுத்த அதிரடியால் நிலைகுலைந்து போனது சசிகலா தரப்பு. இந்நிலையில், தங்கள் பலத்தை நிரூபிப்போம் என ஓ.பி.எஸ் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு கச்சை கட்டி கொண்டு களத்தில் குதித்துள்ளனர்.

ஓ.பி.எஸ் ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து விட்டு நல்லதே நடக்கும் என தெரிவித்துள்ளார். சசிகலாவும் ஆளுனரை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கூறினால் ஓ.பி.எஸ் க்கு திமுக ஆதரவு அளிக்கும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பாதிலளித்த திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக உறுதியாக ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

ஏற்கனவே சட்டமன்ற அவைக்குள்ளாகவே ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிப்போம் என துரைமுருகன் கூறியுள்ள நிலையில், தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளதால் வெறும் 40 எம்.எல்.ஏக்கள் வந்தால் ஓ.பி.எஸ் தான் முதல்வராவார்.