விருதுநகர் அரசியல் கோமாளி, விருதுநகர் அரசியல் முட்டாள். தரம்கெட்ட அரசியல்வாதி. அமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர், ஒரு சராசரி நபர் எப்படி இருக்கவேண்டும் என்பதுகூட தெரியாத நபர். பொதுமக்களால் இந்த விருதுநகர் மாவட்டத்திலேயே புறக்கணிக்கப்பட்ட ஒரு நபர், அவர் நேற்றைய முன் தினம் என்னுடைய தலைவர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசி அவமானப்படுத்தி இருக்கிறார்.

தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியின் ஊழலை பட்டியலிட்டு காட்டினார். ஜெயலலிதா அம்மையாரின் ஊழல்களையும் பட்டியலிட்டு காட்டினார். அதற்கு பதில் சொல்ல திறமையற்றவர்கள், பதில் சொல்ல முடியாதவர்கள், ஊழலிலேயே ஊறித் திளைத்தவர்கள், பதில் சொல்ல முடியாமல் தரங்கெட்டு விமர்சனத்தை நேற்று முன் வைத்திருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் தொடரும் என்று சொன்னால், விருதுநகர் மாவட்டத்திலேயே இன்றைக்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கொதித்தெழுந்து இருக்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி தன்னை திருத்திக் கொள்ளவில்லை என்றால் அவர் திருத்தப்படுவார். அவர் நாக்கு இத்தோடு அடங்கவில்லை என்று சொன்னால் அந்த நாக்கை அடக்குவது எப்படி என்று திமுககாரர்களுக்கு தெரியும். ஆகவே ராஜேந்திரபாலாஜி உன் நாக்கை அடக்கிக் கொள். இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை என திமுக விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த ராஜேந்திரபாலாஜி கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரலிடம் அரசியல் பாலபாடம் கற்றவர். ராஜேந்திர பாலாஜியை இத்தனை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், ஏதாவது உதவி என்றால், தற்போதைய நிலையில் ராஜேந்திரபாலாஜியை நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்கிறார். கே.கே.எஸ்.எஸ்.ஆர்- ராஜேந்திர பாலாஜி இருவருக்கும் உள்ள தொடர்பை விருதுநகர் மாவட்ட புள்ளிகள் அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். 

ராஜேந்திரபாலாஜி- கே.கே.எஸ்.எஸாருக்கும் இடையே உள்ள இந்த விஷயம் திமுக தலைமைக்கு தெரிய வந்துள்ளதால் அங்கிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்,தான் ராஜேந்திர பாலாஜியின் நாவை அடக்க வேண்டும் என்று தனது மனதுக்கு விருப்பமில்லாத போதும் ராஜேந்திரபாலாஜி பற்றி அப்படி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேவலமாக பேசியதாக கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.