பிரதமர் பதவிக்கான போட்டியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 59.22 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் பற்றியும் பிரதமர் பதவிக்கான ரேஸில் மோடி - ராகுல் காந்தி இடையேயான போட்டி உள்ளிட்டவற்றை வைத்து நாடு முழுவதும் நேஷன் சர்வே 2021 என்ற தலைப்பில் ஐஏஎன்எஸ் - சிவோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளி 30 ஆயிரம் பேரிடம் நடந்த இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடிதான் சிறப்பானவர் என 59.22 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 25.62 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒடிஷா, ஹிமாச்சல பிரதேசத்தில் 80 சதவீதம் பேருக்கு மேலேயும் வட கிழக்கு மாநிலங்களில் 75 சதவீதம் பேரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு ஒடிஷாவில் 7 சதவீதம் ஹிமாச்சல் பிரதேசத்தில் 10 சதவீதம், வடகிழக்கு மாநிலங்களில் 10.9 சதவீதம் பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் நரேந்திர மோடிக்கு 62.1 சதவீதமும் ராகுல் காந்திக்கு 28.3 சதவீதமும்; காஷ்மீரில் நரேந்திர மோடிக்கு 46.7 சதவீதமும் ராகுல் காந்திக்கு 34.1 சதவீதமும் ஆதரவு உள்ளது. கர்நாடகா, சட்டீஸ்கர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, பீகார், டெல்லி, உ.பி., பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் மோடிக்கு 60 சதவீதத்துக்கும் மேல் ஆதரவு கிடைத்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 15 மாநிலங்களில் 25 சதவீதத்துக்கும் குறைவான ஆதரவும் 4 மாநிலங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான ஆதரவும் மட்டுமே கிடைத்துள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 16, 2021, 9:38 PM IST