கமல் கோட்சேவை இந்து தீவிரவாதி என்று சொன்ன சர்ச்சைக்கு ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தனது ஆதரவை தெரித்ததுடன் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்.  

"இந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியானது வெற்றிபெறும். இதன்மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. மாநில கட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று நான் நினைக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோட்சேவைப் பற்றி கூறியதில் எந்த தவறும் இல்லை. 

கொடியவன் கோட்சே பற்றி கமல் பேசி உள்ளார். காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொளுத்திய கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என்று இந்து மகாசபை தலைவி கூறியபோது மோடி, யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை?. ஆனால் கமல்ஹாசன் சரித்திர உண்மையை பதிவு செய்தற்கு அவர் மீது செருப்பு, மூட்டை வீசியது அக்கிரமம் அல்லவா?. இதை ஏன் பா.ஜ.க. தலைமை  கண்டிக்கவில்லை?. கோட்சே கொடியவன் என்று பதிவிட்டவரை நடமாடவிடக்கூடாது, நாக்கை அறுப்பேன் என தமிழக அமைச்சர் கூறுவதும், கூட்டத்தில் ஆட்களை அனுப்பி செருப்பு, முட்டை வீச செய்வது என்பது அநாகரிகமான அரசியல்.

இப்படி ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடுகின்றனர் .இதை நான் கண்டிக்கிறேன் என்கிறார் வைகோ