Asianet News TamilAsianet News Tamil

மணிப்பூரில் பாஜக அரசுக்கு ஆதரவு வாபஸ்..? கூட்டணி கட்சி அதிரடி முடிவு!

பாஜக 21 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 3 இடங்களையே காங்கிரஸ் குறைவாகப் பெற்றபோதும், நாகா மக்கள் கட்சியின் 4 பேர், லோக் ஜன சக்தி கட்சியின் 1, இரு சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பீரேந்திர சிங் பதவியேற்றார்.
 

support withdraw in manipur bjp government
Author
Chennai, First Published May 20, 2019, 8:00 AM IST

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணி கட்சியான நாகா மக்கள் கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.support withdraw in manipur bjp government
மணிப்பூரில் கடந்த 2017-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 21 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 3 இடங்களையே காங்கிரஸ் குறைவாகப் பெற்றபோதும், நாகா மக்கள் கட்சியின் 4 பேர், லோக் ஜன சக்தி கட்சியின் 1, இரு சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பீரேந்திர சிங் பதவியேற்றார்.

support withdraw in manipur bjp government
இந்நிலையில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற உள்ளதாக நாகா மக்கள் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சி தலைவர் அவாங்போ நியுமை கூறுகையில், “பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்தியபோது சில கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், இரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எங்களுடைய கோரிக்கைகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. எங்களை பாஜக மதிப்பதும் இல்லை. support withdraw in manipur bjp government
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பெரும்பாலோனர் பாஜக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்கள். இதன்படி பாஜக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இதை செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.
ஆனாலும் நாகா மக்கள் கட்சியைச் சமாதனப்படுத்தப்படுத்த பாஜக தலைவர்கள் முயற்சிவருவதாகக் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios