சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட தகவலறிந்து நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த கவலையில் உள்ளார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க ஓஎன்ஜிசிக்கு சொந்தமான மிக் என்ற ராட்சத இயந்திரம் கொண்டுவரப்பட்டு  மீட்பு பணி வேகமாக  நடைபெற்று வருகிறது. கிட்டதட்ட 40 மணி நேரத்தையும்  கடந்து மீட்பு பணி நடந்து வரும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதுஎதற்கோ பல கண்டுபிடிப்புகளை செய்துள்ள இந்தியாவில் குழந்தைகளை மீட்பதற்கான வழி இல்லையா என பலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், இது போன்றதொரு சம்பவம் இனியும் தொடரக் கூடாது என்றார், அந்தப் பகுதியில் ஆழ்துளை கிணறு மூடப்படாலம் இருப்பது மிகப் பெரிய தவறு என்றார்,  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நாம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற அவர் சுற்றும் தாமதிக்காமல் பிரசனைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்பட வேண்டும் என்றார். நாம் இப்படி நடந்து கொள்வதன் மூலம் குழந்தைகள் சமுதாயம் நம்மை மதிப்பதையே நிறுத்திவிடுவார்  என்றும் , குழந்தைகளுக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

அத்துடன்,  ஆழ்துளை கிணறுகளை மூட ஒரு நெறிமுறை வகுக்க வேண்டும். இதில் அரசின் முழு இயந்திரமும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார். குழந்தைகளின் பாதுகாப்புக்கு தொடர்பான எந்த கண்டுபிடிப்புகளும் செய்யப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த அவர். நாடே குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதுதொடர்பாக தமிழக அரசை தொடர்பு கொண்டு வலியுறுத்துவேன் என்று கூறிய அவர் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட தகவலறிந்து நடிகர் ரஜினிகாந்த் அவர் ஆழ்ந்த கவலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.