தென் தென் இந்தியாவின் மிகப் பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக சன் நெட் ஓர்க் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கலாநிதி மாறன் செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி காவேரி கலாநிதி எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆக பணியாற்று வருகிறார்.

அவர்கள் இருவரின் 2018 ஆம் ஆண்டுக்கான ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவருக்கும் ஊதியமாக 13.83 கோடியும், போனசாக 73.67 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே அதிக ஊதியம் வாங்குபவர்களாக இந்த ஜோடியாத்தான்  திகழ்ந்து வருகிறது.இதே போல் சன் நெட் ஒர்க் நிறுவனத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான பங்குத் தொகையாக 295.56 கோடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே கலாநிதி மாறனின் மகள் காவ்யா கலாநிதி, சன் நெட் ஒர்க் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சன் நெட் ஒர்க் நிறுவனம் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் சானல்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் சன் ரைசர்ஸ் ஹைதிராபாத்  என்ற கிரிக்கெட் டீமையும் நடத்தி வருகிறது.