suiside protest in kanyakumari
துப்பாக்கி சூட்டை கண்டித்து 1000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் கன்னியாகுமரி குள்ச்சல் பகுதியில் குறும்பனையில் மீனவர்கள் கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கையில் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் பேரணி நடத்தினர்.

மக்கள் விரோத திட்டங்களை அரசு கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் விரோத அரசான மத்திய மாநில அரசு பதவி விலக வேண்டுமென கோரியுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு கடலோர காவல்படை மட்டுமே தற்போது வந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் போராட்ட இடத்திற்கு வரவில்லையென தெரிகிறது.
