திமுக தலைமை குறித்து துரைமுருகன் என்னிடம் எவ்வளவோ சொல்லி இருக்கிறார் , அவர் கூறியதை எல்லாம் வெளியில் சொன்னால் நன்றாக இருக்காது என தேமுதிகவையும் சுதீஷையும் கலாய்த்த துரைமுருகனால் சுதீஷ் செம்ம சூடாகி இருக்கிறார்.

திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகவே பார்க்கச் சென்றோம், அவரிடம்  அரசியல் பேசவில்லை மரியாதை நிமித்தமாகவே துரைமுருகனை நானும் , முருகேசனும் சந்தித்தோம்,  துரைமுருகன் பொய் பேசுகிறாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என சேலம் மாவட்ட தேமுதிக செயலாளர் இளங்கோவன் சென்னையில் எல் கே சுதீஷ் முன்னிலையில் செய்தியாளர்களிடம்  விளக்கம் அளித்துள்ளார். 

"

இதனைத் தொடர்ந்துப் பேசிய எல் கே சுதீஷிடம் செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

அதில்; ”நேத்து துரைமுருகனோட பேசுனீங்களா, இல்லையா?” கேட்டதற்கு 

பத்து நாளுக்கு முன்னப் பேசுனேங்க..”

அதுசரி... நேத்து மதியம் நீங்க துரைமுருகனோட பேசுனீங்கன்னு அவர் சொல்லியிருக்காரே..? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஏங்க.. நேத்தே சொல்லிட்டேனே..பத்து வருசமா அவருகிட்டப் பேசிகிட்டிருக்கேன்... அவரு, அவங்க கட்சியப் பத்தி, தலைமையப் பத்தி என்கிட்டப் பேசுனதையெல்லாம் சொன்னா அசிங்கமாயிடும், எங்கள் வளர்ப்பு வேறு அவர்கள் வளர்ப்பு வேறு. என கொந்தளித்துள்ளார்.

தூக்கத்தில் இருக்கும்  ஸ்டாலினை எழுப்பும் அளவிற்கு தேமுதிக கூட்டணி முக்கியம் இல்லை என்று விட்டுவிட்டேன் என துரைமுருகன் கலாய்த்ததற்கு பதிலளித்த சுதீஷ், மு க ஸ்டாலின் தூங்கினால் என்ன ?  தூங்காவிட்டால் எனக்கு என்ன ? என காட்டமாக கூறியிருக்கிறார்.