ஒரே மாவட்டத்தை சேர்ந்தவங்க நாங்க... 

தேமுதிக நிர்வாகிகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.நேற்று ஒரே நாளில், திமுக மற்றும் அதிமுக உடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தியது தேமுதிக. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து வெளிவரவே, கடைசியில் யாருடன் தான் தேமுதிக கூட்டணிவைக்க உள்ளதோ என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் நேற்றைய சந்திப்பு குறித்து மாறி மாறி கருத்து தெரிவித்து வரும் தேமுதிக துணை தலைவர் சுதீப் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன். 

இது குறித்து துரைமுருகன் தெரிவிக்கும் போது...

தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவும் இல்லை, அனகாபுத்தூர் முருகேசன் யார் என்றே தெரியாது. சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார்..தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது  என்றும், தேமுதிக  நிர்வாகிகள் மாறி மாறி பேசி வருகிறார்கள், என்னிடம் பேச வந்தபோது என்னுடைய நிலையை சொன்னேன், தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே, மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காக எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள், தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை என துரைமுருகன் தெரிவிக்க.. இதற்கு பதிலை கொடுக்கும் விதமாக, தேமுதிக துணை தலைவர் சுதீப் தெரிவிக்கும் போது,

அனகை முருகேசனும், இளங்கோவனும் தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்திக்க சென்றனர் என்றும் ஒரே மாவட்டத்தை சேர்ந்த நானும், துரைமுருகனும் பலமுறை சந்தித்து அரசியல் தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளோம் என்றும் சுதீப்  தெரிவித்து உள்ளார்.

உள்ளே பேசுவதை வெளியே சொல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. துரைமுருகன் எத்தனையோ விஷயங்கள் என்னிடம் பேசி உள்ளார். அதிலும் திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் நிறையவே பேசி உள்ளார். இதை  எல்லாம் என்னால் வெளியில் சொல்ல முடியாதா என்ன ? என காரசாரமாக பேசி உள்ளார்.
கூட்டணி பற்றி பேச சென்று.. இப்போ கூட்டணிக்குள்ளேயே பிரச்னை வரும் அளவிற்கு சென்று உள்ளது நிலைமை..