தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது. குறிப்பாக கடலூர், விருத்தாசலம் , விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட  பல மாவட்டங்களில் இதே நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

திடீர் மின்வெட்டு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது. குறிப்பாக கடலூர், விருத்தாசலம் , விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதே நிலை ஏற்பட்டது.

குவியும் புகார்

பல இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில், திடீர் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் பறந்தன. சிலர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து டுவிட்டரில் மின்வெட்டு தொடர்பாக முறையிட்டு வருகின்றனர். திமுகவின் 2006-2011-ம் ஆண்டு ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி விளக்கம்

இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. 

இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Scroll to load tweet…

இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.