Asianet News TamilAsianet News Tamil

திமுகவில் வாரிசு அரசியல்.. அதிருப்தியில் மூத்த தலைவர்கள்.. பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!

நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வாரிசு வளர்ச்சி மீதுதான் கவனம் செல்லுத்துகின்றனர் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். 

Succession politics in DMK .. Senior leaders dissatisfied .. PM Modi
Author
Kanniyakumari, First Published Apr 2, 2021, 6:59 PM IST

நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வாரிசு வளர்ச்சி மீதுதான் கவனம் செல்லுத்துகின்றனர் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகையில்;- எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலையை முக்கியமாக கருதுகின்றனர். தங்களின் வாரிசுகள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். உங்களின் நலன்கள் குறித்து கவலைப்படவில்லை.

Succession politics in DMK .. Senior leaders dissatisfied .. PM Modi

திமுகவில் கருணாநிதியோடு தோளோடு தோள் கொடுத்து பணியாற்றிய அக்கட்சியில் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாட்டின் மனநிலை தெளிவாக உள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது. ஆட்சி கலைப்பை காங்கிரஸ் அரசு பல முறை பயன்படுத்தி உள்ளது. இதனால் திமுக., அதிமுக பாதிக்கப்பட்டு உள்ளன. அனைவரும் இணைந்து, அனைவரின் நம்பிக்கை பெற்று அனைவரும் உயர்வோம் என்பதே மத்திய அரசின் தாரக மந்திரம். மக்களுக்கு சேவை செய்வதில் மதம், ஜாதி ஆகியவற்றை மத்திய அரசு பார்ப்பதில்லை. அனைவருக்குமான அரசாக பாஜக அரசு செயல்படுகிறது. 

Succession politics in DMK .. Senior leaders dissatisfied .. PM Modi

கொரோனாவின் போது, வெளிநாடுகளில் சிக்கி தவித்த 5 லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த தமிழக பாதிரியாரை மீட்டோம். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண் துறையை நவீனமயமாக்கி வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios