அரசியல் கட்சிகளிடையே பிளவை உண்டாக்குவதில் மன்னர் சு.சாமி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தனக்கு தெரிந்ததை நிருபர்களிடையே அடிக்கடி உளறி கொட்டுவார்.

ஒருமுறை திருநெல்வேலியில் ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்த சென்ற சு.சாமி தாலி எடுத்து மணமகள் கையில் கொடுப்பதற்கு பதிலாக தானே கட்ட முயன்றார்.

இந்த வீடியோ காட்சி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் நகைச்சுவையோடும் பார்க்கப்பட்டது.

இது போன்ற செய்கைளில் அடிக்கடி ஈடுபடும் சு.சாமி தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில் அதிமுக கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சு.சாமி அதிமுக விரைவில் பிளவு பட்டு விடும் என ஆரூடம் கூறியுள்ளார்.

அதாவது "சசிகலா சொல்வதை பன்னீர் கேட்கமாட்டார்" என்றும் கட்சி உடையும் என்றும் அக்கட்சி தொண்டர்களிடையே பிரச்சனையை பற்ற வைத்துள்ளார். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.