subramaniyam wrote letter before suicde

அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான நாமக்கல்லை சேர்ந்த காண்டிராக்டர் சுப்ரமணியம்.நேற்று முன்தினம் செவிட்டுரங்கன் பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. 

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான சுப்ரமணியம் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணி உள்பட பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், குவாரிகளில் வருமான வரி சோதனை நடந்த போது அவரது நெருங்கிய நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து சுப்ரமணியத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை சுப்ரமணியம் கூறியதால் வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

அவரது வங்கி கணக்குள் முடக்கப்பட்டு அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வருமான வரித்துறையினர் சுப்ரமணியனை விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் சில முக்கிய புள்ளிகள் உண்மைகளை சொல்லக்கூடாது என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகள், தொழில் துறை நண்பர்கள் என பலரும் என்னை பற்றி ஏதும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சொல்லி விடாதீர்கள் எனவும் மிரட்டியுள்ளனர்.

இந்த தொடர் விசாரணையில் தன்னை கைது செய்ய வாய்ப்பு இருக்குமோ? என்று பயந்த சுப்ரமணியம் தனது தோட்டத்து வீட்டில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. 

மேலும், தற்கொலை செய்வதற்கு முந்தைய நாளான 7-ந் தேதி பண்ணை வீட்டில் உள்ள மரத்தடியில் பல மணி நேரம் அமர்ந்து கடிதம் எழுதியதாக கூறி உள்ளார். அந்த கடிதம் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதப்பட்டதா? அல்லது 9-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக வேண்டியிருந்ததால் அதற்காக விளக்கம் ஏதும் எழுதினாரா? என்பது மர்மமாக உள்ளது.