பா.ஜ.க, மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி நாட்டின் பொருளாதாரத்தை மீட்க, 5 டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

சுப்ரமணியன் சுவாமி, கர்நாடகா தமிழகத்துக்கு காவிரி நீர் தராது, கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்தான் சிறந்தது எனத் தெரிவித்து சர்ச்சையை கிளப்பி இருந்தார். சென்னையில் பிறந்திருந்தாலும் மதுரை அருகில் உள்ள சோழவந்தானை பூர்வீகமாக கொண்ட அவர், தமிழர்களை பொறுக்கி என டுவிட்டரில் விமர்சித்தது முதல் ரஜினி படிப்பறிவில்லாதவர் எனச் சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.  

ஆனால் இப்போது ஆக்கப்பூர்வமான கருத்தை அவர் தனத் ட்விட்டர் பக்கத்தில், ’’தனிநபர் வருமான வரியை ஒழிக்க வேண்டும். முதன்மை கடன் விகிதத்தை 9 சதவீதமாகக் குறைக்க வேண்டும். வங்கி கால வைப்பு வீதத்தை 9 சதவீதம் ஆக உயர்த வேண்டும். நிறுவன ஊழியர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். உள்கட்டமைப்பை வலுப்படுத்த தாராள நிதி அளித்திட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.  

 

நாட்டு நடப்பை அவ்வப்போது தனது குறுகிய ட்விட்டர் பதிவுகள் மூலம் விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி. இவரது பதிவு ஒவ்வொன்றும் பல்வேறு கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது. பாஜக பிரமுகர் என்ற போதும், பாஜக கட்சி செயல்பாடுகளையும் பலமுறை நேரடியாக விமர்சித்துள்ளார் சுவாமி.