subramaniayan samy press meet
அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக எம்பி சுப்ரணியசுவாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறையினர் மத்திய அரசிடமோ அல்லது வேறு யாரிடமோ அனுமதி பெற்று ஒரு இடத்திற்கு ரெய்டுக்கு போக வேண்டியதில்லை என்றார், வருமான வரித்துறை ஓர் தன்னிச்சையான அமைப்பு என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிடோர் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் மத்திய அரசின் பின்னணி இல்லை என்று தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுபோடலாம் ஆனால் திமுகவிற்கு மட்டும் வாக்களிக்கக்கூடாது என கூறினார்.
இந்த தொகுதியில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
