பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே!முதல்வர் வேந்தராவது விதிமுறைக்கு எதிரானதா.?சிபிஎம் கேள்வி

உத்திரபிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் வேந்தராக உள்ள போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகுவது விதிகளுக்கு முரணானது என ஆளுநர் கூறுவது கண்டிக்கதக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் தெரிவித்துள்ளார்

Su Venkatesan has condemned the governor opposition to the chancellor of Siddha Medical University becoming the chief minister

முதல்வர் ஆளுநர் மோதல்

தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆங்கில நாளேட்டிற்கு பேட்டியளித்த ஆளுநர் ரவி, தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, அந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் திராவிட மாடல் என்பது அரசியல் வாசகம் மட்டுமே, காலவதியான சித்தாந்தத்தை  புதுப்பிக்க வைக்கும் முழக்கமே திராவிட மாடல் என கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 

Su Venkatesan has condemned the governor opposition to the chancellor of Siddha Medical University becoming the chief minister

மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்

அந்த அறிக்கையில், ஆரியத்துக்கு ஆலாபனை பாடும் ஆளுநர், திராவிட மாடலுக்கு தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார், சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார் என குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தமிழக சட்டமன்றத்தில ஒப்புதல் அளித்த 17 மசோதாக்கள் ஆளுநரிடம் இன்னும்  நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே ஆளுநர் கூறிய புகாருக்கு பதிலடி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,   திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.” “மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.” “ பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்” என்று சொல்லும் தமிழக ஆளுநர் அவர்களே!  களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம் என பதிவிட்டிருந்தார்.

<

p> 

 

உத்திரபிரதேசத்தில் முதல்வர் வேந்தராகலாமா.?

இதனை தொடர்ந்து பதிவிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், உத்திரபிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் வேந்தராக உள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது “விதிகளுக்கு முரணானது.” என்கிறார் ஆளுநர். பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே! என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் தெரிவித்துள்ளர்.

இதையும் படியுங்கள்

என்எல்சி நிலப்பறிப்புக்கு எதிராக போராடிய பெண்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்குவதா? - அன்புமணி ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios