தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டு, துணை முதலமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, அமைச்சர் தங்கமணி மீது மின்சார ஊழல் குற்றச்சாட்டு, எஸ்,பி.வேலுமணி மீது ஸ்மார்ட் சிட்டி குற்றச்சாட்டு, விஜய பாஸ்கர் மீது குட்கா ஊழல் என பெரும்பாலான அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்.

இதில்அமைச்சர்களுக்கு எதிராக உள்ள பல அதிமுக நிர்வாகிகள் இவர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து சுப்ரமணியன் சுவாமிக்கு அனுப்பியுள்ளனர். அதில் திட்டங்கள் வாரியாக ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் ஊழல்கள், அந்தப் பணம் யார்? யார்? கைகளுக்குப் போனது?  பினாமிகள் யார்? எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது ? போன்ற அனைத்து விவரங்களும் அந்த பைலில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதை வைத்துக் கொண்டு விளையாட முடிவு செய்துள்ளார் சு.சுவாமி. ஏற்கனவே  தமிழக அரசு மீது கடுப்பில் உள்ள ஆளுநர் இது குறித்து பேசியுள்ளதாகவும், விரைவில் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து  புகார் கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சு.சுவாமியின் நடவடிக்கைகளைப் உன்னிப்பாக கவனித்து வரும் தமிழக அமைச்சர்கள், எப்போது மெமோ வருமோ என பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.