Students will be trained - Sengottaian

எந்த பொது தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்டு கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை, அசோக் நகரில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மத்திய அரசின் எந்த தேர்வாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்றார். ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.

டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும என்றார். ஸ்மார்ட் கார்டு திட்டத்தால் எந்த பள்ளியில் எத்தனை மாணவர்கள், வகுப்பில் எத்தனை மாணவர்கள், மாணவர்களின் ரத்த மாதிரி குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்டு கார்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் என்றார். இதனால் மாணவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள்
தெரிந்துகொள்ளப்படும் என்றார்.

தமிழகத்தில் கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 10 சதவீதம் உற்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் இது குறித்து டிசம்பரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.