Students in Puducherry are engaged in road pickets.

பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் அண்மையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த கட்டண உயர்வுக்கு மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு பஸ் பாஸ் நீடிக்கும் எனவும் அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. 

ஆனாலும் மாணவர்கள் கட்டண உயர்வை குறைக்காமல் திரும்ப மாட்டோம் என கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதைதொடர்ந்து தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பேருந்து கட்டணங்களை உயர்த்தி அந்த அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், பொதுமக்கள் உட்பட பலர் எதிர்த்து தெரிவித்தனர். 50 சதவீதம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்களும், கூலி வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. 

எனவே கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.