student found dead at aiims campus
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமணையில் எம்.பி.பி.எஸ். படித்த தமிழக மாணவர் சரத் பிரபுவின் சந்தேக மரணம் தேசிய அளவில் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த எய்ம்ஸ் மாணவர் சரவணன் இறந்தார். இப்போது சரத் பிரபு இறந்திருக்கிறார். முன்னவரைப் போலவே இவரும் திருப்பூரை சேர்ந்தவர் என்பது கூடுதல் அதிர்ச்சி.
சரவணனின் மரணத்தை முதலில் தற்கொலை என்றார்கள். இதன் பின் அவரது குடும்பத்தினர் ‘இது கொலை அல்ல தற்கொலை’ என்றனர். சரவணனின் நண்பர்களும் அதையே உறுதி செய்து பேசினர். இந்நிலையில் சரத் பிரபுவின் மரணமும் இப்போது தற்கொலை என்று பேசப்படுகிறது. இதுவும் விசாரணையின் போக்கில் கொலை என்று புகார் கிளப்பப்படலாம் என்று தகவல்.
எய்ம்ஸில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு வட இந்திய மாணவர்களால் மிக கடுமையான மிரட்டல் தொந்தரவுகள் இருக்கிறது எனபது பொதுவான குற்றச்சாட்டு. அதாவது தமிழக மாணவர்களை மிரட்டி துரத்தியடித்துவிட்டால் அந்த இடத்தில் வட இந்திய மாணவர்கள் யாராவது படிக்க சேர்ந்துவிடலாம் என்பதே குற்! என்கிறார்கள். மெரிட்டில் சேர்ந்த சரவணனை மிரட்டிப் பார்த்தவர்கள், அவர் வெளியேறாத காரணத்தால் கொலை செய்யப்பட்டார் என்று புகார் எழுந்தது. ‘தன் கையில் தானே விஷ ஊசி ஏற்றிக் கொண்டு இறந்தார்’ என்று முதலில் வழக்கு பதிவானது. அதன் பிறகு ‘இல்லை, சரவணனை சிலர் தாக்கி மடக்கிப் பிடித்துக் கொண்டு, அவரது கையில் இரத்த நாளத்தில் ஊசி போடுவதற்கான உபகரணத்தை செருகி, அதன் வழியே ஊசிமருந்தை ஏற்றிக் கொன்றுள்ளார்கள்.’ என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இப்போது சரத் பிரபுவின் மரணம் மிக அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இது இன்னும் என்னென்ன பூகம்பங்களை கிளப்பப்போகிறதோ!
