சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமைச்சர்களை எதிர்த்து பலம் வாய்ந்த திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறக்கியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமைச்சர்களை எதிர்த்து பலம் வாய்ந்த திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறக்கியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தவிர்த்து 28 அமைச்சர்கள் உள்ளனர். இதில் துணை முதல்வர் உட்பட பெரும்பாலான அமைச்சர்களை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. அதன் வெளிப்பாடாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக அமைச்சர்களை தேர்தலில் தோற்கடிப்போம் எனப் பேசி வந்தார்.

அமைச்சர்கள் நிற்கும் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக நின்று தோற்றாலும், திமுகஆட்சி வந்ததும், தோற்றவர்களுக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், குறிப்பாக அமைச்சர்களை எதிர்த்து வலம் வாய்ந்த திமுக வேட்பாளர்களை களமிறங்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர்
1. எடப்பாடி - பழனிசாமி - சம்பத் குமார்
2. போடி - ஓ. பன்னீர்செல்வம் - தங்க தமிழ்ச்செல்வன்
3. ராயபுரம் - ஜெயக்குமார் - ஐட்ரீம் இரா.மூர்த்தி
4. ஆவடி - பாண்டியராஜன் - சா.மு.நாசர்
5. மதுரவாயல் - பென்ஜமின் - காரப்பாக்கம் கணபதி
6. விழுப்புரம் - சி.வி சண்முகம் - லட்சுமணன்
7. கடலூர் - எம்.சி. சம்பத் - கோ.அய்யப்பன்
8. ஆரணி சேவூர் ராமச்சந்திரன் - எஸ்.எஸ் அன்பழகன்
9. ஜோலார்பேட்டை கே.சி. வீரமணி - க. தேவராஜி
10. ராசிபுரம் (தனி) - சரோஜா - மதிவேந்தன்
11. பாலக்கோடு- கேபி அன்பழகன் - பிகே முருகன்
12. குமாரபாளையம் தங்கமணி - எம்.வெங்கடாசலம்
13.வேலுமணி - தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சேனாதிபதி
14. கோபிசெட்டிபாளையம் - செங்கோட்டையன் - ஜி.வி. மணிமாறன்
15. பவானி - கருப்பணன் - கேபி துரைராஜ்
16. கரூர் - எம்ஆர் விஜயபாஸ்கர் - செந்தில் பாலாஜி
17. திருச்சி (கிழக்கு) - வெல்லமண்டி நடராஜன் - முனைவர் இனிகோ. இருதயராஜ்
19. விராலிமலை - சி.விஜயபாஸ்கர் - பழனியப்பன்
20. மதுரை (மேற்கு) - செல்லூர் ராஜு - சின்னம்மாள்
21. திருமங்கலம் - ஆர்.பி. உதயகுமார் - மு. மணிமாறன்.
22. வேதாரண்யம் - ஓஎஸ் மணியன் - வேதரத்தினம்
23. நன்னிலம் - காமராஜ் - ஜோதிராமன்
24. ராஜபாளையம் - ராஜேந்திர பாலாஜி - சௌ.தங்கபாண்டியன்
25. சங்கரன்கோவில் (தனி) - ராஜலெட்சுமி - ஈ.ராஜா
