தம்பியை மறந்துடாதீங்க..! அமைச்சர்களுக்கு கிச்சன் கேபினட்டில் இருந்து ஸ்ட்ரிக் உத்தரவு..!
அடுத்த 50 வருடங்களுக்கு தமிழகத்தை காக்க உள்ள திராவிடத் தலைவர் உதயநிதி என்று அமைச்சர் மா.சுப்ரமணியின் அண்மையில் சட்டப்பேரவையில் பேசியிருந்தார். இதே போல் அமைச்சர் எ.வ.வேலுவும் கூட சட்டப்பேரவையில் தனது உரையின் போது உதயநிதியை புகழ்ந்து பேசியிருந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை உடனுக்குடன் கண்டித்து ஆக வேண்டிய விஷயத்தை மட்டுமே பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் கூறி வரும் நிலையில் உதயநிதிக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும் தொடர் கதையாகி வருகிறது.
அடுத்த 50 வருடங்களுக்கு தமிழகத்தை காக்க உள்ள திராவிடத் தலைவர் உதயநிதி என்று அமைச்சர் மா.சுப்ரமணியின் அண்மையில் சட்டப்பேரவையில் பேசியிருந்தார். இதே போல் அமைச்சர் எ.வ.வேலுவும் கூட சட்டப்பேரவையில் தனது உரையின் போது உதயநிதியை புகழ்ந்து பேசியிருந்தார். இவர்கள் மட்டும் அல்ல அனைத்து அமைச்சர்களும் சட்டப்பேரவையில் பேசும் போது தவறியும் கூட உதயநிதி பற்றி பேசாமல் இருப்பது இல்லை. அதிலும் மானியக் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசும் அமைச்சர்கள் முதலில் சபாநாயகர் குறித்து சில வார்த்தைகளை கூறுகின்றனர். பிறகு முதலமைச்சரை புகழ்ந்துவிட்டு, உதயநிதியை பாராட்டிவிட்டு பிறகு துரைமுருகன் பக்கம் செல்கின்றனர்.
இந்த புகழுரைகளில் உதயநிதி குறித்து பேசும் பேச்சுகள் மட்டும் தனியாக தெரிகின்றன. அதாவது உதயநிதி குறித்து என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி செய்து கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாகவே உதயநிதி தனக்கு என்று தனியாக பிஆர்ஓ டீம் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டார். அந்த டீம் தற்போதும் இரவு பகலாக பணியாற்றி வருவதாக சொல்கிறார்கள். அதிலும் சட்டப்பேரவையில் மறுநாள் யார் யார் பேச உள்ளனர்? எந்த அமைச்சர் எந்த துறை மீது பேச உள்ளார்? அந்த அமைச்சருடன் உதயநிதியின் கடந்த கால தொடர்பு என பலவற்றை ஆராய்ந்து சிங்க் ஆகும் வகையில் பேச பாய்ன்ட்டுகள் ரெடி செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.
அந்த பாய்ன்ட்டுகள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பாஸ் செய்யப்பட அவர்கள் தாங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பேச்சில் அவற்றை இணைத்துக் கொள்வதாக கூறுகிறார்கள். முதலமைச்சரும் கூட தன்னை பற்றி புகழ வேண்டாம் என்று மட்டுமே கூறியுள்ளார். இதனால் அமைச்சர்களாக இருந்தாலும் சரி எம்எல்ஏக்களாக இருந்தாலும் சரி உதயநிதியை பற்றி வஞ்சம் இல்லாமல் புகழ்வதாக சொல்கிறார்கள். இதே போல் உதயநிதியை புகழ்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசுவது ஏதாவது ஹிட் ஆகிவிட்டால் அந்த வீடியோ கிளிப் உடனடியாக அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
இவை அனைத்தின் பின்னணியிலும் கிச்சன் கேபினட்டின் கண்டிப்பான உத்தரவு இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் தான் மூத்த அமைச்சர்களாக இருந்தாலும் சரி ஜூனியர் எம்எல்ஏக்களாக இருந்தாலும் சரி உதயநிதி புகழ மட்டும் கூச்சப்படுவதே இல்லை என்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் உதயநிதியை அடுத்த ஸ்டேஜூக்கு தயார் படுத்துவது தான் என்று கூறுகிறார்கள். விரைவில் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி உதயநிதிக்க ஒரு மிகப்பெரிய எலவேசன் இருக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். அதற்கான ஒத்திகை தான் இந்த சட்டப்பேரவை புகழுரைகள் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.