Asianet News TamilAsianet News Tamil

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறினால் கடும் நடவடிக்கை.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை.

தனியார் ஆய்வகங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெறுவது குறித்து பொதுமக்கள் 1800 425 3993 /  104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் 24 மணிநேரமும் புகார்களை அளிக்கலாம், புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Strict action will be taken if the fee fixed by the government is exceeded .. Health Minister warns.
Author
Chennai, First Published May 21, 2021, 9:52 AM IST

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க covid-19 தோற்று உறுதிப்படுத்தவும், RT-PCR பரிசோதனை கட்டணம் குறைக்கும் அரசாணை வெளியீடு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பு தற்போதுள்ள கொரோனா பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராக, கட்டுப்படுத்தக்கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பொது சுகாதார திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் covid-19 பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது covid-19 தொற்று பரவல் தன்மையின் நிலையை கருத்தில் கொண்டு, தொற்று நோய்க்கான சிகிச்சைக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டியலினை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் அவர்களால் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எளிதில் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வழிமுறைகள் அரசாணை எண் 231 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை நாள் 7-5-2021 மூலம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலை குறைக்கும் வகையில், சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.  

Strict action will be taken if the fee fixed by the government is exceeded .. Health Minister warns.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் தொற்றுநோய் சிகிச்சை செலவுகளையும், தனியார் மருத்துவமனைக்கு அரசு மீள வழங்கும். இதற்கென 2021-22 நிதி ஆண்டில்  1030. 77 கோடி ரூபாய் நிதி தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப் பேரிடர் காலத்தில் பொதுமக்களின் covid-19 தொற்று உறுதிப்படுத்தும் RT-PCR பரிசோதனை செலவுகளை பொதுமக்களின் நலனுக்காக குறைக்க வேண்டுமென்று சீரிய நோக்கத்துடன் ஏற்கனவே நிர்ணயம் செய்த தொகை அரசால் பரிசீலனை செய்யப்பட்டு 15-5-2021 அன்று நடைபெற்ற, உயர்மட்ட குழு கூட்டத்தில் RT-PCR பரிசோதனை செலவுகளைக் குறைக்க ஆலோசனை செய்யப்பட்டு குழுவின் பரிந்துரையின் பேரில் அரசு ஆணை எண் 247 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை நாள் 19-05-2021 ன் கீழ் குறிப்பிட்டவாறு ஆணைகள் வழங்கியுள்ளது.

Strict action will be taken if the fee fixed by the government is exceeded .. Health Minister warns.

1.covid-19 தொற்று உறுதிப்படுத்தும் RT-PCR பரிசோதனை அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வு கூடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் 800 லிருந்து 550 ஆகவும், குழு மாதிரிகளுக்கு (pooled samples) 600 லிருந்து 400 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

2. முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட  பயனாளியாக இல்லாதவர்கள் தனியார் ஆய்வுக்கூடங்களில் RT-PCR பரிசோதனை செய்வதற்கு கட்டணம் 1800 இல் இருந்து 900 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது மேலும் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்வதற்கு கூடுதலாக 300 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தனியார் ஆய்வகங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெறுவது குறித்து பொதுமக்கள் 1800 425 3993 /  104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் 24 மணிநேரமும் புகார்களை அளிக்கலாம், புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios