கேரளாவில் டிசம்பர் மாதம் 8, 10, 14 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக இளம் வயது மகளிரணி பிரிவினரை களமிறக்கி உள்ளது. 

கேரளாவில் 8-ம் தேதி முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை ஆலப்புழை , இடுக்கி மாவட்டங்களிலும்  10-ம்  தேதி 2-ம் கட்டமாக, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு , வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 1 4-ம் தேதி 3-வது கட்டமாக மலப்புரம் , கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.  

கேரளாவில் மொத்தம் உள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளில் மட்டன்னூர் நகராட்சி தவிர 1199 உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 
6 மாநகராட்சிகள் , 86 நகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள் 15 2  ஊராட்சி ஒன்றியங்கள் 941 கிராம பஞ்சாயத்துகளுக்கு மொத்தம்  21865 வார்டு களுக்கு 34774 வாக்கு சாவடிகளில் ஒட்டுப்பதிவு  நடக்கும்.. உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த அக்டோபர் 1-ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.  

அதன்படி கேரளாவில் மொத்தம் உள்ள 2 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரத்து 823 வாக்காளர்களில், ஒரு கோடியே 29 லட்சத்து 25 ஆயிரத்து 766 பேர் ஆண்கள். ஒரு கோடியே 41 லட்சத்து 94 ஆயிரத்து 725 பேர் பெண்கள் . 282 பேர் திருநங்கைகள். இந்நிலையில் கம்யூனிஸ்டு கட்சிக வேட்பாளர்களை நிலைகுளைய வைக்கும் விதமாக பாஜக மகளிரணியை சேர்ந்த இளம்பெண்களை பல்வேறு தொகுதிகளில் களமிறக்கி உள்ளது. அதேபோல், கேரள மாநிலம் பஞ்சவிலா தொகுதியைச் சேர்ந்தவர் சுதர்மா தேவராஜன். இவருடைய குடும்பம் நீண்ட நாட்களாக இந்துத்துவ கொள்கையையும் பாஜகவிற்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். சுதர்மாவின் அப்பாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த தேர்தலின் போது பாஜகவில் சேர்ந்த சுதர்மா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெறும் 335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

ஒரு வருடம் முன்பு பாஜகவின் பெண்கள் அமைப்பான மஹிலா மோர்ச்சாவின் மண்டல குழு உறுப்பினராக சுதர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பாஜகவை சுதர்மா தனது பகுதியில் வலுப்படுத்தியுள்ளார், கேரளாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பாக கொல்லம் மாவட்டத்தில் இந்து அமைப்புகள் பாஜகவை வெற்றி பெறவைக்க களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் சுதர்மா வெற்றியை தடுக்க நினைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரது சொந்த மகனையே அவரை எதிர்த்து போட்டியிட அழைத்து டிக்கெட் கொடுத்துள்ளனர், சுதர்மா மகன் பெயர் தினுராஜ் . இதுபற்றி சுதர்மா கூறுகையில், ''என் மகன் இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவது தெரிந்தால் நான் பின்வாங்குவேன் என்று நினைத்து அவனை நிறுத்தியுள்ளனர். ஆனால், குடும்பம் வேறு, அரசியல் வேறு கேரளாவை குட்டி சுவராக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த வேண்டும் அவர்களை வீழ்த்தினால்தான் மதமாற்றம் ஊழலை தடுக்க முடியும் தேர்தலில் போட்டியிடுவதால் நான் என் மகனுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருக்கப் போவதில்லை, அவனும் என்னை அம்மா என்று கூப்பிடாமல் இருக்கப்போவதில்லை.

தினுவின் அப்பா என்னுடன் ஒருநாள் பிரசாரத்தில் கலந்துகொண்டார். ஆனால் மகன் வருத்தப்படுவான் என்று அவரை என்னுடன் வரவேண்டாம் எனக் கூறிவிட்டேன்'' என்று கூறுகிறார்.