Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை விட்டுட்டு போய் மணிப்பூரை கவனியுங்கள்!அமித்ஷாவுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி

இந்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்கள் ஒற்றுமை கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அது உண்மையாக இருந்தாலும் 2024ல் 300 க்கும் மேற்பட்ட இடங்களுடன் மோடி மீண்டும் வெற்றிபெறுவதை மக்கள் உறுதி செய்துவிட்டனர்

Stop criticizing opposition parties and watch Manipur! Karti Chidambaram responds to Amit Shah
Author
First Published Jun 26, 2023, 7:45 AM IST

உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் கட்சிகள் கூட்டத்தை கொச்சைப்படுத்தியது அரசியல் நாகரீகம் அல்ல என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதையும் படிங்க;- எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தொடர்வது கஷ்டம்: ஆம் ஆத்மி!

Stop criticizing opposition parties and watch Manipur! Karti Chidambaram responds to Amit Shah

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். பாட்னாவில் போட்டோ செஷன் நடக்கிறது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மோடிக்கு 2024ல் சவால் விடுவோம் என்ற செய்தியை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் அறிவித்துள்ளனர். இந்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்கள் ஒற்றுமை கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அது உண்மையாக இருந்தாலும் 2024ல் 300 க்கும் மேற்பட்ட இடங்களுடன் மோடி மீண்டும் வெற்றிபெறுவதை மக்கள் உறுதி செய்துவிட்டனர் என்றார். இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எங்களை விமர்சிப்பதை விட்டுட்டு  மணிப்பூரை கவனியுங்கள் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவை மிரட்டும் பாஜக.! இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் நாங்கள் இல்லை- கனிமொழி 

Stop criticizing opposition parties and watch Manipur! Karti Chidambaram responds to Amit Shah

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி. கார்த்தி சிதம்பரம்;- ஜனநாயக பாதையில், அரசியல் சாசனத்தை மதிக்கும், அனைத்து மக்களையும் அரவணைக்கும் மத்திய அரசு அமைய வேண்டும் என்பதற்காக பாட்னாவில் 15 கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடினர். சேர விரும்பாத கட்சிகள் கூட்டத்துக்கு வரவில்லை.

இதையும் படிங்க;-   ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 12 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டு இருந்தது: அமித் ஷா!!

Stop criticizing opposition parties and watch Manipur! Karti Chidambaram responds to Amit Shah

காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் கட்சிகள் கூட்டத்தை கொச்சைப்படுத்தியது அரசியல் நாகரீகம் அல்ல. இதை விடுத்து அவர் மணிப்பூரை கவனிக்க வேண்டும். அங்கு நடைபெறும் கலவரத்தால் ராணுவம், போலீசார் நுழைய முடியவில்லை. அங்குள்ள அரசை நீக்குவதற்கு தைரியம் இல்லை என கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios