சீமான் பங்கேற்ற பரப்புரையில் கல்வீச்சு… 6 பேர் படுகாயம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசுகையில், அருந்ததிய சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். இதனை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை பேச்சு... சீமான் மீது வழக்குப்பதிவு!!
மேலும் சீமான் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதுக்குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (பிப்.22) சீமான் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருகட்சியினரும் கற்கள், கொடிகள் கட்டிய கம்புகளை தூக்கி வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: சர்ச்சையான மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு... முத்தரசன் கண்டனம்!!
இதையடுத்து அங்கு வந்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் உள்பட சிலரின் மண்டை உடைந்த நிலையில் சில காவல்துறையினரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் 6 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளதோடு மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.