காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்துக்கு நிகராக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட் விவகாரம். இந்நிலையில் கமல்ஹாசன் ‘போராட்ட மக்கள் அழைத்தால் துத்துக்குடி வர தயார்!’ என்று அறிவித்தார்.

உடனே போராட்ட குழு சார்பாக சிலர் சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து அழைத்திருக்கிறார்கள். அப்போது ‘நீங்கள் தனியாளாக வரவேண்டும். கட்சி பேனரில் வர கூடாது.’ என்று சில கண்டிஷன்களை கமலுக்கு போட்டார்களாம். அவரும் ஏற்றுக் கொண்டு கொடி கட்டாத கட்சி காரில்தான் ஏப்ரல் 1-ம் தேதியன்று போராட்ட களத்துக்கு வந்தார்.

இந்நிலையில் கமல் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக ‘கமல் தூத்துக்குடிக்கு வருவது போராடுவதற்கு அல்ல. போராடும் மக்களை குழப்புவதற்கே!’ என்று ஒரு அறிக்கை குண்டை வீசினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வியனரசு. இது ஒருவித  பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

இந்நிலையில் போராட்ட களத்துக்கு வந்த கமல்ஹாசன் தன் பேச்சின் போது “இங்கு எல்லாமே வியாபாரத்தை முன்னிறுத்தித்தான் நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் வியாபாரம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோடிக்கணக்கில் பணம் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் கொடுக்கத் தயாராக இல்லை, அதனால்தான் தொடர்ந்து போராடுகிறார்கள்! என்று ஆலை தரப்பு சொல்கிறதாம்.

அண்டஹ் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் கொடுக்க மனமில்லாதவர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அள்ளியள்ளி கொடுப்பார்களாம்.” என்று பேசிக்கொண்டே செல்ல, கூட்டத்தில் பரபரப்பாகியிருக்கிறது.

உடனே மக்கள், ‘நாங்கள் பணத்துக்கு அடிமையாக மாட்டோம்ணே!’ என்றதும், ‘நான் உங்ளை குறாஇ சொல்லவில்லை. பரப்பப்படும் அவதூறை பற்றிக் கேள்விப்பட்டதை சொல்கிறேன்’ என்றிருக்க்கிறார். இந்த நிலையில் கூட்டத்திலிருந்து சட்டென்று எழுந்த நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மண்டல இளைஞர் பாசறை செயலாளர் வேல்ராஜ் ”இந்த போராட்டம் முக்கிய கட்டத்துக்கு வந்திருக்கு.

எழுச்சி தினமும் அதிகரிச்சுட்டு இருக்குது. இதை சீர்குலைக்கவே பண பேரம் பற்றி பேசப்படுகிறது. அந்த ஆலைக்காரன் கொடுக்குற பணத்தை வாங்க இங்கே யாரும் தயாரில்லை. நீங்க சொல்றது இங்கே நடக்காது. எங்கள் போராட்டத்தை யாராலும் சீர்குலைக்க முடியாது.’ என்று கமலை முகத்துக்கு நேராக காய்ச்சி எடுத்துவிட்டாராம்.இதில் டென்ஷனான கமல் அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

கமல் வரும் முன்னேயே ‘குழப்பம் செய்யவே வருகிறார்’ என்று பட்டாசை பற்ற வைத்த வியனரசுவோ “நாங்கள் சொன்னது நடந்துவிட்டது பார்த்தீர்களா! ஸ்டெர்லைட் ஆலை துவங்கப்பட்ட போதே இதுபோலத்தான் போராட்டங்கள் நடந்தன. அப்போது சில அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து போராட்டத்தை நாசம் செய்துவிட்டனர். இப்போதும் அதேபோல் சதி நடக்கிறது. அதற்கு கமல் இரையாகிவிட்டாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

நான் கேள்விப்பட்டவரை கமலை சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் சிலர் சந்தித்ததாக தகவல்கள் வருகின்றன. அதன் பிறகே அவர் தூத்துக்குடி வர சம்மதித்திருக்கிறார்.” என்று ஆர்.டி.எக்ஸ். ஒன்றை அநாயசமாய் பற்ற வைத்திருக்கிறார்.

இது எங்கே போய் முடியுமோ!