Asianet News TamilAsianet News Tamil

தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என ஒதுங்கி இருந்தால் நல்லது.. சசிகலாவுக்கு ஜெயக்குமார் வார்னிங்.

இதுநாள் வரை இருந்ததைப் போலவே சசிகலா அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என ஒதுக்கி இருப்பது நல்லது  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார் கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது திரைப்படத் துறையை வளரவிடாமல் திமுக செய்தது  என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Staying away from politics if is good for Sasikala. Ex Minister Jayakumar Warning.
Author
Chennai, First Published Apr 13, 2022, 5:38 PM IST

இதுநாள் வரை இருந்ததைப் போலவே சசிகலா அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என ஒதுக்கி இருப்பது நல்லது  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார் கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது திரைப்படத் துறையை வளரவிடாமல் திமுக செய்தது  என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக  தொண்டரை ஒருவரே தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்தான் ஜெயக்குமார் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதிக்கு எதிராக பேசிவருகிறார். அந்த வரிசையில்தான் தற்போது அவர் இப்புகாரையும் முன் வைத்துள்ளார்.

Staying away from politics if is good for Sasikala. Ex Minister Jayakumar Warning.

தன்னை கைது செய்யும்போது காவல்துறை அத்துமீறி நடந்துகொண்டதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் இன்று காலை புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை  சந்தித்த அவர் கூறியதாவது:- கடந்த 35 ஆண்டுகளாக எந்த ஒரு வழக்கும் இல்லாமல் மக்கள் பாராட்டும் வகையில் வாழ்ந்து வருகிறேன். அதன் காரணமாகவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்  எனக்கு பல்வேறு பதவிகளை அளித்தார். தற்போது தமிழகத்தில் நடந்து வருகின்ற ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை கூறி என்னை கைது செய்துள்ளது.

Staying away from politics if is good for Sasikala. Ex Minister Jayakumar Warning.

சமூக விரோதியான நரேஷ் என்பவரின் மூலம் பொய் புகாரை பெற்று கைது செய்தனர். என்னை கைது செய்தபோது என் வீட்டுற்குள் நுழைந்து போலீசார் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். எனவே மனித உரிமை ஆணையம் இதை விசாரிக்க வேண்டும்,  என்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஜெயலலிதா இருக்கும் போது தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என சசிகலாவிடம் எழுதிப் பொற்றுக் கொண்ட பின்தான் அவரை வீட்டில் சேர்த்தார். எனவே சசிகலா அதே நிலையில் தொடர்ந்து இருந்தால் அவருக்கு நல்லது என்றார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios