மதுரை பாலமேடு ஜல்லிகட்டு குழு கலந்தாய்வு கூட்டம் ஜல்லிகட்டில் 650 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கி அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட பாலமேடு ஜல்லிகட்டு குழு முடிவு செய்துள்ளது.  மதுரை மாவட்டத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிகட்டு போட்டி ஜனவரி -16ல் பாலமேட்டிலும், ஜனவரி-17ல் அலங்கா நல்லூரிலும் 2020 ஆண்டுக்கான ஜல்லிகட்டுபோட்டி நடைபெறுகிறது.

.இதற்கான ஏற்பாடுகள் குறித்து பாலமேடு ஜல்லிகட்டு கமிட்டி சார்பில் கூட்டம் நடைபெற்றது இதில் வரும் ஜல்லிகட்டு போட்டியில் 650 காளைகள் மட்டுமே பங்கு பெற வேண்டும் எனவும், முதல் பரிசாக ,கார், மற்றும் டூவிலர் மற்றும் நாட்டு இனகறவை பசு மாடுகள் பரிசாக வழங்க ஆலோசிக்கப்பட்டது. 

 அதிக காளைகளுக்கு டோக்கன் வழங்குவதால் போட்டியில் காளைகள் பங்கு பெறாமல் இருப்பது இதன் மூலம் தடுக்கப்படும் என்றனர் .போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரையில் நடைபெறும் கூடுதலாக 1 மணி நேரம் வழங்க கோரியும் மதுரை  மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் பாலமேடு ஜல்லிகட்டு குழு தெரிவித்துள்ளது

.