Asianet News TamilAsianet News Tamil

நீட்-ஐ ஒழித்துகட்ட ஸ்டாலின் எடுத்த பயங்கர முடிவு..12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவு கேட்டு பரபரப்பு கடிதம்.

நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதலமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Stalins terrible decision to abolish NEET.. Sensational letter seeking the support of 12 state chief ministers.
Author
Chennai, First Published Oct 4, 2021, 1:09 PM IST

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின்  முதன்மையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்கு தேவையான ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டுமென கோரி 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளது என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே ராஜன் அவர்களது குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

 Stalins terrible decision to abolish NEET.. Sensational letter seeking the support of 12 state chief ministers.

அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள் அத்தகைய மாற்று வழிகளை செயல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறையில் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், நீதியரசர் ஏ.கே ராஜன் அவர்களுக்கு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2001 என்ற சட்ட முன்வடிவை நிறைவேற்றி உள்ளதாகவும் அந்த சட்ட முன்வடிவு நகலையும் கடிதத்துடன் இணைத்து அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மத்திய அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவர் நிறுவனங்களில் செயற்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் அழிப்பதன் மூலம் அரசியல் அமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடு ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இது தொடர்பாக மாநில அரசுகள் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையை தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும் நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும் என்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். 

Stalins terrible decision to abolish NEET.. Sensational letter seeking the support of 12 state chief ministers.

தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாகி தடுக்கவும் அந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதலமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Stalins terrible decision to abolish NEET.. Sensational letter seeking the support of 12 state chief ministers.

இது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி மாண்புமிகு நீதியரசர்ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கு திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி இப்பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios