Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரை இன்று மீண்டும் சந்திக்கும் ஸ்டாலின்…. எடப்பாடியார் அரசுக்கு தொடரும் நெருக்கடி !!!

staline meet governer today
staline meet governer today
Author
First Published Sep 10, 2017, 6:48 AM IST


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று  மாலை 5 மணிக்கு  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  சந்தித்துப் கடிதம் கொடுக்கவுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் தனித்தனியாய கடிதம் அளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாகவும், அவர் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக திமுக உள்ளிட்ட  எதிர்கட்சிகள் சார்பில் ஆளுநரை சந்தித்து ஏற்கனவே மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் ஸ்டாலின்  திமுக, காங்கிரஸ்கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை இன்று மாலை சந்திக்க உள்ளார் .

அப்போது சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக, காங்கிரஸ், டி.டி.வி.தினகரன் அணி, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து, எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி வருவதால் எடப்பாடியாருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios