தமிழகத்தை அதிமுக மற்றும் திமுக ஆண்ட போதிலும் இரு கட்சியின் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர்  பிறந்த நாள் வாழ்த்து எப்போதும் தெரிவித்தது கிடையாது, இன்று தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தாளில் அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள்களில் அதிமுக - திமுக இதுவரையில் எவ்வித வாழ்த்தும் தெரிவித்தது கிடையாது,

தற்போது அந்த முறை தகர்ந்து எறிந்து அரசியல் நாகரிகத்துடன் முதன் முறையாக எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வர் ஒ.பி.எஸ். பன்னீர் செல்வத்திற்கு தொலைபேசி முலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியை ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்