Stalin will be sent to jail | டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை போல், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் சிறைக்கு செல்வது உறுதி என்று, அதிமுக எம்.பி. தம்பிதுரை பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.
Stalin will be sent to jail- Thambidurai says | கடந்த வாரம், சென்னை உள்பட 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் மதுவிற்பனை தொடர்பாக, சென்னையில் உள்ள அதன் தலைமை அலுவலகமும் சோதனையில் தப்பவில்லை. தமிழ்நாடு அரசின் மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, திமுகவை குறிப்பாக செந்தில்பாலாஜிக்கு எதிராக போராட்டங்களை கையில் எடுத்துள்ளது. எனவே, வரும் நாட்களில் டாஸ்மாக் முறைகேடு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த சூழலில், தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி என்று, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை பரபரப்பாக பேசியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைப்பெற்றது.
டாஸ்மாக்கில் 1 லட்சம் கோடி ஊழல்! அமலாக்கத்துறை சோதனைக்கு இவர் தான் காரணமா?
இந்த கூட்டத்தில், அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளாரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை கலந்து கொண்டு பல்வேறு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை பேசியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் மூலம் திமுக அரசு 1000 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டு உள்ளது என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே, டெல்லியின் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மது விற்பனை மூலம் ஊழல் செய்து சிறை சென்றது போல தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறை செல்வது உறுதி. மு. க. ஸ்டாலின் சிறைக்கு செல்வதை தவிர்க்கவே மும்மொழி கொள்கையில் நாடகம் ஆடி வருகிறார்.
மத்திய அமைச்சரவையில் திமுக 18 ஆண்டு காலம் பதவி வகித்து வந்தனர். அப்போது தான் காங்கிரஸ் ஆட்சியில் நீட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்பட்டன. அப்போது திமுக அரசு என்ன செய்தது? வருகிற 2026ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தலில், எடப்பாடியார் தலைமையில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும். இவ்வாறு தம்பிதுரை பேசினார்.
