MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டாஸ்மாக் கடைகளுக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்! அப்படி இல்லனா அவரது ஆன்மாவிற்கு இழைக்கும் துரோகம்! எச்.ராஜா

டாஸ்மாக் கடைகளுக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்! அப்படி இல்லனா அவரது ஆன்மாவிற்கு இழைக்கும் துரோகம்! எச்.ராஜா

மதுபான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு 'கலைஞர் மதுபான விற்பனை நிலையம்' என பெயர் சூட்ட எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 15 2025, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
H.Raja

H.Raja

மதுபான கொள்முதலில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு "கலைஞர் மதுபான விற்பனை நிலையம்" என பெயர் சூட்டுவது ஏக பொருத்தமாக இருக்கும் என எச்.ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மக்களின் வரிப்பணத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு "கலைஞர் நூற்றாண்டு நினைவு" என்கிற ஸ்டிக்கர் ஒட்டி பெயர் சூட்டும் திமுக அரசு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதலில் கொண்டு வந்த திட்டம் மது விற்பனை திட்டம் தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
MK Stalin

MK Stalin

ஆகவே முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களை  பெருமைபடுத்தும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் "கலைஞர் மதுபான விற்பனை நிலையம்" என பெயர் சூட்டுமா திமுக அரசு?  டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில் கருணாநிதி உருவத்தை அச்சிட்டு "கலைஞர் நூற்றாண்டு நினைவு மதுபான விற்பனை" என ஸ்டிக்கர் ஒட்டுமா?

35
TASMAC

TASMAC

மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் எல்லா திட்டங்களுக்கும் "கலைஞர் நூற்றாண்டு நினைவு" என்கிற பெயர் சூட்டும் திமுக கருணாநிதி அவர்கள் அறிமுகம் செய்த மதுபான விற்பனை திட்டத்திற்கு மட்டும் அவரது பெயரை சூட்டாமல் இருப்பது அவரது புகழை இருட்டடிப்பு செய்யும் செயல் அல்லவா?  ஆகவே திறனற்ற திராவிட மாடல் ஆட்சியின் பயனற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். 

45
Karunanidhi

Karunanidhi

மதுபான கொள்முதலில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு "கலைஞர் மதுபான விற்பனை நிலையம்" என பெயர் சூட்டுவது ஏக பொருத்தமாக இருக்கும் என பரிந்துரைக்கிறேன். பூரண மதுவிலக்கை இரத்து செய்து தமிழகத்தில் மது விற்பனையை அறிமுகம் செய்த உங்கள் தந்தையை பெருமைப்படுத்த டாஸ்மாக் கடைகளுக்கு உங்கள் தந்தையின் பெயரை சூட்டுவீர்கள் என்று நம்புகிறேன். 

55
H.raja Vs CM Stalin

H.raja Vs CM Stalin

அனைத்து திட்டங்களுக்கும் உங்கள் தந்தையின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டி அவர் அறிமுகம் செய்த திட்டத்திற்கு மட்டும் அவர் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்றால் அது அவரது ஆன்மாவிற்கு இழைக்கும் துரோகம் இல்லையா? வரலாறு உங்களை மன்னிக்காது அல்லவா? தமிழக முதல்வர் அவர்களே நான் முன்வைத்துள்ள கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன் என எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(14.1 ov)133/2
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 18 runs in 35 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(102.0 ov)376/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thiruparankundram: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை! திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள்
Recommended image2
Voter List Special Camp: முகவரி மாற்றம் டூ பெயர் நீக்கம் வரை... தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
Recommended image3
'ரூ.680 கோடி மக்கள் பணம் செலவு; பாதியில் எப்படி கைவிட முடியும்?' - பரந்தூர் ஏர்போர்ட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved