பாதியிலேயே சாப்பாட்டில் கைகழுவிய ஸ்டாலின்.. திட்டத்தை ஆரம்பித்து அவமானப்படுத்தலாமா.? கிழிக்கும் ஜெயக்குமார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பாதியிலே கை கழுவியது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது, சாப்பாட்டில் கை கழிவியது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பாதியிலே கை கழுவியது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது, சாப்பாட்டில் கை கழிவியது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். முதலமைச்சரே திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு அதை அவமானப் படுத்தலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளிக்குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர், போட்டோவுக்காக சாங்கியத்திற்கு ஓரிரு வாய் உணவு சாப்பிட்டார், பின்னர் தட்டில் நிறைய இருந்த சாப்பாட்டில் அப்படியே கை கழுவினார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தட்டில் சாப்பாட்டை வைத்துக்கொண்டு அப்படியே கை கழுவலாமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படியுங்கள்: தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... வேல்முருகன் அறிவுறுத்தல்!!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சரை விமர்சித்துள்ளார். அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர், அதன் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதையும் படியுங்கள்: CM வீட்டு முன்னாடியே வந்து சீன் போட்டா இதுதான் கதி...! வாண்டடா வந்த மாட்டிய ABVP-க்கு சரியான ஆப்பு.
நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான், மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, ஆனால் திமுக இதை கண்டு கொள்ளவே இல்லை என்றார், அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் திமுக அரசு எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது என்றார், காலை சிற்றுண்டி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பெயரில் மட்டும்தான் பிரம்மாண்டம் இருக்கிறதே தவிற திட்டத்தில் இல்லை என்றார், ஆனால் காலைச்சிற்றுண்டி ஆரம்பித்து வைத்த முதலமைச்சரே அந்த திட்டத்தை அவமானப்படுத்தியுள்ளார்.
சாப்பிடும் தட்டிலேயே அவர் அப்படி கை கழுவலாமா? அப்படி செய்து அவர் விவசாயிகளை அவமானப்படுத்துகிறார் என்றார். அரசு இதுவரை சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, பெண்களுக்கான உதவித்தொகை, நீட் தேர்வு மசோதா போன்றவை அப்படியே உள்ளது என்றார். ஓ. பன்னீர்செல்வம் பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற அவர், ஜெயலிதாவாக தொண்டர்கள் என்னை பார்க்கிறார்கள் என சசிகலா கூறியதை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை, சசிகலா நிறைய ஜோக் சொல்லி வருகிறார், அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும் அவர் கிண்டல் அடித்தார்.